×

கால்நடை உதவி மருத்துவர்கள் 454 பேரின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: கால்நடை உதவி மருத்துவர்கள் 454 பேரை பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். கால்நடை பராமரிப்புத்துறையில் கடந்த 2012ஆம் ஆண்டில் ஏராளமான உதவி மருத்துவர் பணிகள் காலியாக இருந்ததாலும், கால்நடை உதவி மருத்துவர்களின் சேவை உடனடியாக தேவைப்பட்டதாலும் 843 உதவி மருத்துவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் பணி அமர்த்தல் தற்காலிகமானது என்று அறிவிக்கப்பட்டாலும், அவர்களுக்கு நிரந்தரப் பணியாளர்களுக்குரிய காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது.

கால்நடை உதவி மருத்துவர்கள் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது. ஆனால் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்கக் கோரி கால்நடை உதவி மருத்துவர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று 454 கால்நடை உதவி மருத்துவர்களையும் பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் தெரிவித்தார்.

The post கால்நடை உதவி மருத்துவர்கள் 454 பேரின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : President ,Vijayakanth ,Chennai ,Veterinary Leader ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...