×

ஒன்றிய சட்டத்துறை இணையமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் சுகாதாரத்துறை இணையமைச்சராக மாற்றம்..!!

டெல்லி: ஒன்றிய சட்டத்துறை இணையமைச்சராக இருந்த எஸ்.பி.சிங் பாகேல் சுகாதாரத்துறை இணையமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய சட்டத்துறை இணையமைச்சராக இருந்த எஸ்.பி.சிங் பகேல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த ஆண்டு மறு வரையறை செய்யப்பட்டபோது கிரண் ரிஜிஜூவுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர் உச்ச்சநீதிமன்றத்தின் கொலிஜியத்துக்கு எதிராக விமர்சன கருத்துக்களை தெரிவித்துவந்தார். உச்சநீதிமன்றம் மற்றும் சட்டத்துறை இடையிலான மோதல் போக்கும் வெளிப்படையாக தெரிந்தது. இது ஆளும் மோடி அரசுக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. இதனால் அதிரடியாக கிரண் ரிஜிஜூவின் சட்டத்துறை இன்று காலை பறிக்கப்பட்டு அவருக்கு புவி அறிவியல் இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராக இருக்கும் அர்ஜுன் ராம் மேவால் சட்டத்துறை அமைச்சர் பொறுப்பை கூடுதலாக கவனித்துக் கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வரலாற்றில் அமைச்சரவை அந்தஸ்து இல்லாத ஒருவருக்கு சட்டத்துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். இந்நிலையில், ஒன்றிய சட்டத்துறை இணையமைச்சராக இருந்த எஸ்.பி.சிங் பாகேல் சுகாதாரத்துறை இணையமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். கிரண் ரிஜிஜு மாற்றப்பட்ட சில மணி நேரங்களில் சட்டத்துறை இணையமைச்சர் எஸ்.பி.சிங் பகேலும் மாற்றப்பட்டுள்ளார்.

The post ஒன்றிய சட்டத்துறை இணையமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் சுகாதாரத்துறை இணையமைச்சராக மாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Union Legislative ,Co-Minister ,S. GP Singh Bagel ,Health ,Delhi ,Union ,Legislative ,S.A. GP Singh Bagel ,Union Legal ,Minister ,Union Legal Co-Minister ,Department ,Dinakaran ,
× RELATED பாஜகவில் மீண்டும் சீட் தராததால்...