×

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கம் தோண்டும் 3வது இயந்திரத்தின் சோதனை வெற்றி: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை: 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கம் தோண்டும் 3வது இயந்திரத்தின் சோதனை வெற்றி என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் அருகே அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் பல்வேறு அலுவலர்கள் முன்னிலையில் நடந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நிருவாகம் தகவல் தெரிவித்துள்ளது. மெட்ரோ பணிக்கு சுரங்கம் தோண்டும் 3வது இயந்திரத்திற்கு ஃபிளமிங்கோ பூநாரை என பெயரிடப்பட்டுள்ளது. ஃபிளமிங்கோ இயந்திரத்தின் பணி வரும் ஆக. மாதம் செயல்பட ஆயத்தப்பணிகள் நடைபெறுகிறது என்று மெட்ரோ நிருவாகம் தெரிவித்துள்ளது.

The post 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கம் தோண்டும் 3வது இயந்திரத்தின் சோதனை வெற்றி: மெட்ரோ நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Metro administration ,
× RELATED சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ...