×

தொன்மையான 207 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல்..!!

சென்னை: தொன்மையான 207 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுரையின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் திருப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கிட வாரந்தோறும் மாநில அளவிலான வல்லுநர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டம் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.

சென்னை, தங்கசாலை, அருள்மிகு அடிப்படை பிரசன்ன விநாயகர் திருக்கோயில், ஏழுகிணறு, அருள்மிகு தர்மராஜா திருக்கோயில், கடலூர் மாவட்டம், நாணமேடு, அருள்மிகு பிள்ளையார் மாரியம்மன் திருக்கோயில், காட்டுமன்னார்கோயில், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், உடையார்பாளையம், அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர், அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில், திருக்கருக்காவூர், அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், பேட்டை, அருள்மிகு வினைதீர்த்த விநாயகர் திருக்கோயில், பாளையங்கோட்டை, அருள்மிகு வேணுகோபாலசுவாமி திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், அருள்மிகு வெற்றிவேலப்பர் திருக்கோயில், ஒட்டன்சத்திரம், அருள்மிகு கதிர்நரசிங்கப் பெருமாள் திருக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், இலுப்பூர், அருள்மிகு வலியன் திருக்கோயில், சேலம் மாவட்டம், ஓமலூர், அருள்மிகு கண்ணணூர் மாரியம்மன் திருக்கோயில், நெய்காரப்பட்டி, அருள்மிகு சென்றாயப்பெருமாள் திருக்கோயில், தேனி மாவட்டம், உத்தமபாளையம், அருள்மிகு சுருளிவேலப்பர் சுவாமி திருக்கோயில், கா.புதுப்பட்டி, அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட 207 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மாநில அளவிலான வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும். இக்கூட்டத்தில் ஆகம வல்லுநர்கள் திரு.சந்திரசேகர பட்டர், திரு.அனந்தசயனபட்டாச்சாரியார், திரு.கோவிந்தராஜப்பட்டர், முதுநிலை ஆலோசகர் திரு.கே.முத்துசாமி, திருமதி சீ.வசந்தி, திரு.இராமமூர்த்தி தொல்லியல் துறை வடிவமைப்பாளர் முனைவர் டி.சத்தியமூர்த்தி உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தொன்மையான 207 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Tags : State Expert Committee ,Chennai ,207 archaic Thirukoils ,Tamil Nadu ,Chief Minister ,G.K. ,Stalin ,207 archaic ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...