×

காதலியை பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த காதலன் கைது

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீல். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம், தனக்கு திருமணமானதை மறைத்து பழகினார். இது காதலானது. அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்புதான், நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீல் திருமணமானவர் என்ற விவரம் காதலிக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்தார். உடனே காதலை முறித்து கொண்டதோடு, அவரை சந்திக்கவும் மறுத்தார்.

ஆத்திரமடைந்த நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீல், சம்பவத்தன்று, அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அவரது அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியையும் வைத்தார். எரிச்சல் ஏற்பட்டு அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் பற்றி சூரத் போலீசில் அந்த பெண் புகார் செய்தார். அதில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, தனது ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். போலீசார் விசாரணை நடத்தி நிகுஞ்ச் குமாரை கைது செய்தனர்.

The post காதலியை பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த காதலன் கைது appeared first on Dinakaran.

Tags : Surat ,Nikunj Kumar Amritbhai Patil ,Surat, Gujarat ,
× RELATED சூரத்தில் இருந்து 1320 டன் யூரியா வரத்து