×

நடுவானில் ஏர் இந்தியா விமானம் குலுங்கியது: 7 பயணிகளுக்கு தசைப்பிடிப்பு

புதுடெல்லி: காற்றோட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் நடுவானில் ஏர் இந்தியா விமானம் கடுமையாக குலுங்கியது. இதில் 7 பயணிகளுக்கு லேசாக தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக ஏர் இந்தியா விமான செய்தி தொடர்பாளர், விமான போக்குவரத்து இயக்குநரக அதிகாரி ஆகியோர் கூறியதாவது: டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு 224 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டது.

வானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது காற்றோட்டத்தில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. இதனால் விமானம் கடுமையாக குலுங்கியது. இதில் 7 பயணிகளுக்கு லேசாக தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு விமான பணியாளர்கள் முதலுதவி அளித்தனர். விமானத்தில் பயணித்த ஒரு மருத்துவர் மற்றும் செவிலியரின் உதவியுடன் முதலுதவி அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post நடுவானில் ஏர் இந்தியா விமானம் குலுங்கியது: 7 பயணிகளுக்கு தசைப்பிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Air India ,Naduwan ,New Delhi ,Nadhiwan ,
× RELATED விமானப்பணி நேர வரம்புகளை மீறிய...