×

பாஜ எம்.பி. ரத்தன் லால் கட்டாரியா காலமானார்

சண்டிகர்: அரியானா மாநிலம் அம்பாலா எம்.பியும் பாஜக தலைவருமானவர் ரத்தன் லால் கட்டாரியா. இவர் சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் சண்டிகரில் உள்ள முதுகலை முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 72. மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

அவரது மறைவுக்கு அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இறுதி சடங்குகள் சண்டிகரில் உள்ள மணிமஜ்ராவில் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பாஜ எம்.பி. ரத்தன் லால் கட்டாரியா காலமானார் appeared first on Dinakaran.

Tags : Baja ,Ratan Lal Kataria ,Chandigarh ,Ariana State Ambala M. ratan lal kataria ,
× RELATED பாஜவுடன் கூட்டணி முறிவு; அதிமுக மாவட்ட...