×

சீனாவின் மீன்பிடி கப்பல் இந்திய பெருங்கடலில் கவிழ்ந்தது: மாயமான 39 மீனவர்களை தேடும் பணி தீவிரம்

சீனா: சீனாவின் மீன்படி கப்பல் இந்திய பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாயமான 39 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சீனாவுக்கு சொந்தமான மீன்பிடி கப்பல் இந்திய பெருங்கடலில் கவிழ்ந்தது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல் சீனா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்திய பெருங்கடலின் மைய பகுதிக்கு அருகே கப்பல் சென்றபோது திடீரென கவிழ்ந்தது. சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கியது. இதில் கப்பலில் இருந்த சீனாவை சேர்ந்த 17 மீனவர்கள், இந்தோனேசியாவை சேர்ந்த 17 மீனவர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீனவர்கள் 5 பேர் என 39 பேர் இருந்தனர்.

அவர்கள் அனைவரும் மாயமாகினர். அவர்களை தேடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு மீட்பு குழுக்களுக்கு சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். மேலும், சர்வதேச கடல்சார் மற்றும் மீட்பு உதவிகளை நாடி சீன அதிபர் அழைப்பு விடுத்ததையடுத்து, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளின் கடற்படைகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post சீனாவின் மீன்பிடி கப்பல் இந்திய பெருங்கடலில் கவிழ்ந்தது: மாயமான 39 மீனவர்களை தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : China ,Indian Ocean ,Dinakaran ,
× RELATED அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா...