×

இத்தாலி ஓபன் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் அரையிறுதிக்கு எலினா-ஜெலினா தகுதி

ரோம்: ரோம் நகரில் நடந்து வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் கால் இறுதியில் இன்று அதிகாலை நடந்த போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக்- கஜகஸ்தானின் எலினா ரைபாகினா மோதினர். இதில் முதல் செட்டை 6-2 என ஸ்வியாடெக்கும், 2வது செட்டை 7-6 எலினாவும் கைப்பற்றினர். 3வது செட்டில் 2-2 என இருந்த நிலையில் ஸ்வியாடெக் காயத்தால் வெளியேறியதால் எலினா ரைபாகினா, அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதேபோல் மற்றொரு கால் இறுதியில் ஸ்பெயினின் பவுலா படோசாவை 2-6, 6-4, 3-6 என லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். அரையிறுதியில் எலினா-ஜெலினா மோதுகின்றனர். மற்றொரு அரையிறுதியில் உக்ரைனின் அன்ஹெலினா கலினினா, ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவா மோதுகின்றனர்.

The post இத்தாலி ஓபன் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் அரையிறுதிக்கு எலினா-ஜெலினா தகுதி appeared first on Dinakaran.

Tags : Italy Open tennis ,Elina-Jelina ,Women's Singles ,Rome ,Italy Open ,Women's Singles Semifinals ,Dinakaran ,
× RELATED மெக்சிகோ ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் லெய்லா