×

சென்னை பெட்ரோ கெமிக்கல் ஆலையில் டெக்னிக்கல் ஆபீசர், அசிஸ்டென்ட்

பணி விவரம்:

1. Assistant Technical Officer: 10 இடங்கள் (பொது-5, எஸ்சி-4, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.44,900. வயது: 32க்குள். தகுதி: மெக்கானிக்கல்/கெமிக்கல்/பாலிமர் டெக்னாலஜி உள்ளிட்ட ஏதாவதொரு பாடத்தில் 60% தேர்ச்சியுடன் பி.இ.,/பி.டெக் பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் அல்லது பாலிமர் சயின்ஸ் பாடத்தில் எம்எஸ்சி பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம்.
2. Assistant Officer (Finance & Accounts): 1 இடம் (எஸ்சி). சம்பளம்: ரூ.44,900. வயது: 32க்குள். தகுதி: 60% மதிப்பெண்களுடன் பி.காம் மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றிருப்பதோடு 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Technical Assistant: 20 இடங்கள் (பொது-12, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-2, எஸ்சி-3, எஸ்டி-1). சம்பளம்: ரூ.21,700. வயது: 32க்குள். தகுதி: பிட்டர்/டர்னர்/மெஷினிஸ்ட் ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்து 2 வருட பணி அனுபவம்.
4. அ. Administrative Assistant ஆ. Accounts Assistant
7 இடங்கள் (பொது-4, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.21,700. தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். அக்கவுன்ட்ஸ் அசிஸ்டென்ட் பணிக்கு 60% மதிப்பெண்களுடன் பி.காம்., தேர்ச்சி பெற்று டேலியில் 2 வருட பணி அனுபவம். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.cipet.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.5.2023.

The post சென்னை பெட்ரோ கெமிக்கல் ஆலையில் டெக்னிக்கல் ஆபீசர், அசிஸ்டென்ட் appeared first on Dinakaran.

Tags : Petrochemical ,Chennai ,Petrochemical Plant ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...