×

மேற்கு திசை காற்று, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மேற்கு திசை காற்று, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸாக இருக்கும். தமிழ்நாட்டில் கோடை மழை மார்ச் 1 முதல் இன்று காலை வரை 81% கூடுதலாக பெய்துள்ளது. மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக 99.2மி.மீ. மலை பெய்யும் நிலையில் இந்த ஆண்டு 179.2மி.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post மேற்கு திசை காற்று, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Research Centre ,Chennai ,Meteorological Centre ,
× RELATED தமிழகத்தின் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை