×

சேப்பாக்கத்தில் ப்ளே ஆஃப் போட்டிகள்: இன்று மதியம் 12 மணிக்கு பேடிஎம் வழியே டிக்கெட் விற்பனை தொடக்கம்..!!

சென்னை: சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான ப்ளே ஆஃப் சுற்றுக்கான டிக்கெட் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு பேடிஎம் இணையத்தளத்தில் தொடங்குகிறது. ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 7 லீக் போட்டிகளுக்கும் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் வரும் 23, 24ம் தேதிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் 2 ப்ளே ஆஃப் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மதியம் 12 மணி முதல் பேடிஎம் தளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை முதல் நாள் இரவில் இருந்து காத்திருந்து ரசிகர்கள் வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது.

The post சேப்பாக்கத்தில் ப்ளே ஆஃப் போட்டிகள்: இன்று மதியம் 12 மணிக்கு பேடிஎம் வழியே டிக்கெட் விற்பனை தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Chepaukam ,Paytm ,Chennai ,IPL ,Cheppakam ,BATM ,Chephakkam ,Dinakaran ,
× RELATED பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா