×

சென்னையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 4,044 மெகாவாட் மின்சாரம் நுகர்வு ; அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!!

சென்னை: சென்னையில் நேற்று அதிகபட்சமாக 4,044 மெகாவாட் மின்சாரத்தை நுகர்வோர் உபயோகித்துள்ளனர். தமிழகத்தில் கத்திரி வெயில் தாக்கம் உச்சம் பெற்ற நிலையில் மாநில அளவில் மொத்த மின் நுகர்வு வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையிலும் கடந்த சில நாட்கள் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக நிறுவனங்கள், வீடுகளில் ஏசி, ஏர்கூலர் போன்ற பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எதிர்பாராதவிதமாக மின் நுகர்வு அதிகரித்து வருகிறது.இதனால் நேற்று ஒரே நாளில் சென்னையின் மின் நுகர்வு 4,044 மெகாவாட்டாக உயர்ந்து, புதிய சாதனை படைத்தது.

இது தொடர்பாக ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,

“சென்னையின் நேற்றைய 17/05/2023 மின் தேவை 4044 மெகாவாட் ஆகும். இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது.

இதற்கு முந்தைய உட்சபட்ச தேவை 16/05/2023ல் 4016 MW ஆகும்.

நேற்று சென்னையில் மின் நுகர்வு 9.03 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டது. இதற்கு முன் 16/05/2023 அன்று 9.02 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது.

அதுவே கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், சென்னையின் அதிகபட்ச மின் தேவை 18/06/2019 அன்று 3738 MW மட்டுமே.

அதிமுக ஆட்சியில், உட்சபட்சமாக வெறும் 6.64 கோடி யூனிட்களே 17/06/2019 அன்று பயன்படுத்தப்பட்டிருந்தது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

The post சென்னையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 4,044 மெகாவாட் மின்சாரம் நுகர்வு ; அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister Senthil Balaji ,Tamil Nadu ,Kathri ,
× RELATED கடும் வெயில்.. சென்னை மக்கள் வெளியே...