×

பாளை. தொகுதி 7, 36வது வார்டுகளில் வளர்ச்சித்திட்ட பணி

நெல்லை, மே 18: பாளையங்கோட்டை தொகுதி, 7வது வார்டு, 36வது வார்டு பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை அப்துல்வஹாப் எம்எல்ஏ ஆய்வு செய்தார். நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 7வது வார்டு மனக்ககாவலன் பிள்ளை நகரில் கழிவுநீர் ஓடை அமைப்பது குறித்தும் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் குறித்தும், 36வது வார்டு காமராஜர் நகரில் நடைபெற்று வரும் கழிவுநீர் ஓடை, சிறிய கல்வெட்டு பாலம் ஆகிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது இவை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆய்வின் போது நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜூ, பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ் அவர்க நெல்லை மாநகரில் மக்களுக்கு தொல்லை சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் நாய்களை பிடித்த பணியாளர்கள் ள், 36வது வார்டு கவுன்சிலர் சின்னத்தாய், மாநகர துணைச் செயலாளர் மூளிகுளம் பிரபு பாண்டியன், மாநகர பிரதிநிதி சுண்ணாம்பு மணி, மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஜெய் கணபதி உடனிருந்தனர்.

The post பாளை. தொகுதி 7, 36வது வார்டுகளில் வளர்ச்சித்திட்ட பணி appeared first on Dinakaran.

Tags : Palai ,Nellai ,Abdulwahab ,Balayangottai ,Balai ,Dinakaran ,
× RELATED பாளை ராஜகோபால சுவாமி கோயில் வருஷாபிஷேகம்