×

மூணாறு மேளாவிற்கு காங்கிரஸ் எதிர்ப்பு

 

மூணாறு, மே 18: கேரளா மாநிலம், மூணாறில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் திருவிழாவாக மூணாறு மேளா கடந்த 2012ம் ஆண்டு வரை நடத்தப்பட்டது.  அதன்பிறகு 12 வருட இடைவெளிக்கு பின் ‘2023 மூணாறு மேளா’ மே 16 முதல் 28ம் தேதி வரை நடத்த கிராம பஞ்சாயத்து நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ேநற்று காலை மூணாறு மேளா தொடங்கியது. இந்த மேளாவிற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மேளா குறித்து எவ்வித ஆலோசனையும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களிடம் மேற்கொள்ளவில்லை. மேலும் மேளா கமிட்டிக்கு காங்கிரஸ் கட்சி சேர்ந்த யாரையும் அழைக்கவில்லை. எனவே இந்த மூணாறு மேளாவிற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே மணி தெரிவித்துள்ளார். மேலும் இந்த மேளா நடத்துவது சிலரின் தனிப்பட்ட தீர்மானமாகும். ஊழல் நடத்தி பணம் சம்பாதிப்பதற்காக ஊராட்சியை சேர்ந்த சிலர் இதை நடத்துகின்றனர். மூணாறில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு இதுவரை தீர்வு காணாத ஊராட்சி நிர்வாகம், மூணாறு மேளா நடத்துவதில் இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன் என்று புரியவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

The post மூணாறு மேளாவிற்கு காங்கிரஸ் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Moonaru ,Moonaru Mela ,Munnar, Kerala State ,Dinakaran ,
× RELATED வசந்த காலத்தை வரவேற்கும் வகையில்...