×

தாராபுரத்தில் பாஜ, பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த வாலிபர்களுக்கு அமைச்சர் வாழ்த்து

 

தாராபுரம், மே 18: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜ மற்றும் பாமகவில் இருந்த 20க்கும் மேற்பட்ட வாலிபர்கள்அந்த கட்சிகளில் இருந்து விலகி திமுக நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைந்தனர்.
அவர்களுக்கு கட்சியினர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.பின்னர் திருப்பூர் கலைஞர் அரங்கத்திற்கு சென்ற அனைவரும் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தி துறை அமைச்சர் முபெ சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல குழு தலைவர் இல. பத்மநாபன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர்.நிகழ்ச்சிகளில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், நகர அவைத்தலைவர் கதிரவன், நகரத் துணைச்செயலாளர் தவச்செல்வன், ஜீவா ஜெயக்குமார், பைக் செந்தில்குமார், ஜிம் கவிராஜ், ஜீவா பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post தாராபுரத்தில் பாஜ, பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த வாலிபர்களுக்கு அமைச்சர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : BJP ,BAM ,Tarapuram ,DMK ,Tarapuram, Tirupur district ,BAMAK ,
× RELATED கல்வி நிறுவனங்களில் களைகட்டிய பொங்கல் விழா