×

தென்மாபட்டு அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

 

திருப்புத்தூர், மே 18: தென்மாபட்டு அருகே குழாய் உடைப்பால் காவிரி கூட்டு திட்ட குடிநீர் வீணாக பெருக்கெடுத்து ஓடுகிறது. உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்புத்தூர் கண்டரமாணிக்கம் ரோடு தென்மாபட்டு பகுதியில் காவிரி குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி கழிவுநீருடன் கலக்கிறது.கடந்த 2006-11 திமுக ஆட்சியின் போது திருச்சி
-ராமநாதபுரம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.615 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டது.

இதில் திருப்புத்தூர் வழியாக வரும் காவிரி குடிநீர் தென்மாபட்டு, ஆத்தங்கரைப்பட்டி, பட்டமங்கலம், செம்பனூர், கல்லல் வழியாக ராமநாதபுரம் வரை செல்கிறது.இதில் ஆங்காங்கே தொட்டி (ஜம்பர்) அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் அடைப்பு, நீர் வெளியேறுதல், நீர் குறைவாக வருதல் உள்ளிட்டவை கண்டறியப்படும்.இந்நிலையில், திருப்புத்தூரில் இருந்து கண்டரமாணிக்கம் செல்லும் ரோட்டில் தென்மாபட்டு அட்டக்ககுளம் அருகே செல்லும் காவிரி குடிநீர் குழாயில் சில தினங்களுக்கு முன் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறி அட்டக்குளம் கழிவுநீர் குளத்தில் வீணாக கலக்கிறது.
இந்த உடைப்பால் தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பாதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post தென்மாபட்டு அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tenmapattu ,Tiruputhur ,Dinakaran ,
× RELATED அனுமதியின்றி மஞ்சுவிரட்டு; 5 பேர் மீது வழக்கு