×

சேரங்கோடு படச்சேரி பகுதியில் மின் கம்பங்களில் தீப்பந்தம் கட்டி நூதன போராட்டம்

 

பந்தலூர், மே 18 : பந்தலூர் அருகே சேரங்கோடு படச்சேரி பகுதியில் தெருவிளக்குகளை சீரமைக்க கோரி மின்கம்பத்தில் தீப்பந்தம் கட்டி நூதன போராட்டத்தை பொதுமக்கள் நடத்தினர்.
நீலகிரி மாவட்டம், சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட படச்சேரி பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சிறு குறு விவசாயிகள் மற்றும் தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள், அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் தொல்லை அதிகமாக இருந்து வரும் இப்பகுதியில் போதுமான தெருவிளக்குகள் இல்லாமல் அப்பகுதியினர் அவதிப்பட நேரிட்டுள்ளது. இந்நிலையில் போதிய தெருவிளக்கு வசதிகள் செய்து தரவேண்டும் என சேரங்கோடு ஊராட்சிக்கு பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் தெருவிளக்குகளை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து படச்சேரி பகுதி மக்கள் வீதிகளில் உள்ள மின்கம்பங்களில் தீப்பந்தம் கட்டி நூதன போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். மேலும் முறையாக தெருவிளக்குகளை பராமரிக்க சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்

The post சேரங்கோடு படச்சேரி பகுதியில் மின் கம்பங்களில் தீப்பந்தம் கட்டி நூதன போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Padachery ,Serangode ,Bandalur ,Cherangode Padachery ,
× RELATED பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி...