×

தம்பியை கொடூரமாக கொன்ற அண்ணன்

சேலம்: சேலத்தில் வீட்டிற்குள் தம்பியை கொடூரமாக கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர். சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு செல்வம் (52), ராஜகணபதி (47) என்ற மகன்களும், மாலா என்ற மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. செல்வமும், ராஜணபதியும் கூலித்தொழிலாளிகள். இருவருக்கும் குடிபழக்கம் உண்டு. செல்வத்தின் மனைவி தேவி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சென்னையில் வேலை செய்து வருகின்றனர். ராஜகணபதிக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அவர்கள் சிறுவயதாக இருந்தபோதே ராஜகணபதியை விட்டு பிரிந்து சென்று விட்டனர்.

இந்நிலையில் அண்ணன், தம்பிக்கிடையே சொத்து தகராறு இருந்து வந்தது. வீட்டின் நிலம் தந்தை பெயரில் இருக்கிறது. இதனால் அண்ணன், தம்பி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதன்படி நேற்று முன்தினமும் சண்டை ஏற்பட்டது. இந்நிலையில், ராஜகணபதி மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். நேற்று காலை மாடியில் இருந்து இறங்கி வந்த செல்வம், வீட்டின் அறையில் தலை நசுங்கிய நிலையில்அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், தம்பியை உருட்டுக்கட்டை மற்றும் செங்கலால் அடித்துக் கொன்றதை செல்வம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்தனர்.

The post தம்பியை கொடூரமாக கொன்ற அண்ணன் appeared first on Dinakaran.

Tags : Bran ,Salem ,Ramasamy ,Salem Ammabet ,
× RELATED மசாஜ் சென்டரில் சோதனையிட்ட ேபாலீசாரிடம் கமிஷனர் விசாரணை