×

எலக்ட்ரானிக் குலுக்கலில் தேர்வு செய்யப்படுவார்கள்: திருப்பதியில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவைக்கு இன்று முதல் முன்பதிவு

திருமலை: திருப்பதியில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகளை இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்காக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை குலுக்கல் முறையில் ஆன்லைனில் தேர்தெடுக்கப்படும். இதற்காக, 18ம் தேதி(இன்று) காலை 10 மணி முதல் 20ம் தேதி(சனிக்கிழமை) காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்தவர்கள் எலக்ட்ரானிக் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு எஸ்எம்எஸ் அல்லது இ-மெயில் மூலம் பக்தர்களுக்கு மெசேஜ் அனுப்பப்படும்.

இதேபோல் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார உள்ளிட்ட காணொலி காட்சி சேவைகளுக்கான டிக்கெட் மூலம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கு 22ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு முன்பதிவு செய்யலாம். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் தரிசனம் செய்யவதற்கான இலவச டிக்கெட்டுகள் 23ம்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. ஜூலை மாதத்திற்கான ரூ.300 டிக்கெட்டுகள் 24ம் தேதி வெளியிடப்படும்.

The post எலக்ட்ரானிக் குலுக்கலில் தேர்வு செய்யப்படுவார்கள்: திருப்பதியில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவைக்கு இன்று முதல் முன்பதிவு appeared first on Dinakaran.

Tags : Arjitha ,Tiruppati ,Tilumalai ,Devasthanam ,Tirupati ,
× RELATED திருப்பதியில் தரிசனத்துக்கு 2 நாள் காத்திருக்கும் பக்தர்கள்