×

நியூயார்க் நகரில் பரபரப்பு: இளவரசர் ஹாரி தம்பதியை துரத்திய புகைப்படக்காரர்கள்

நியூயார்க்: இளவரசர் ஹாரி, அவரது மனைவி மேகன் ஆகியோரை புகைப்படக்காரர்கள் காரில் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் தங்கியிருக்கும் இளவரசர் ஹாரி, மனைவி மேகன் தம்பதியினர் நேற்று முன்தினம் நியூயார்க்கில் ஒரு தொண்டு நிறுவன விழாவில் கலந்து கொண்டனர். அதன்பின் அவர்கள் காரில் புறப்பட்ட போது புகைப்படக்காரர்கள் அவர்களை துரத்தினார்கள். சுமார் 2 மணி நேரம் அவர்கள் காரை 6 வாகனங்கள் பின்தொடர்ந்தன. இதனால் சாலையில் அடுத்தடுத்து பல விபத்துகள் நடந்தன. பலர் காயம் அடைந்தனர். இதுபற்றி நியூயார்க் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

The post நியூயார்க் நகரில் பரபரப்பு: இளவரசர் ஹாரி தம்பதியை துரத்திய புகைப்படக்காரர்கள் appeared first on Dinakaran.

Tags : New York City ,Prince Harry ,New York ,Meghan ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்