×

காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால்மாலிக் உதவியாளர் வீடுகளில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் ஒன்றிய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறார். குறிப்பாக புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானது ஒன்றிய அரசின் தவறால் நடந்தது என்று தெரிவித்தார். இந்தநிலையில் சிபிஐ அவர் மீது 2 வழக்கு பதிவு செய்துள்ளது. இன்சூரன்ஸ் மோசடி மற்றும் ரூ.2200 கோடி கிரு ஹைட்ேரா எலக்ட்ரிக் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. ஏப்.28ம் தேதி சத்யபால் மாலிக்கிடம் இதுபற்றி சிபிஐ விசாரித்தது.

இந்தநிலையில் சத்யபால் மாலிக் உதவியாளராக இருந்த சுனக்பாலி என்பவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை டெல்லி, ராஜஸ்தானில் உள்ள 11 இடங்கள் ஜம்முவில் சுனக் பாலியின் வீடு ஆகிய இடங்களில் நடந்தது. மேலும் ஆடிட்டர்கள் சஞ்சய் நராங், வீரேந்தர்சிங் ரானா, கன்வார்சிங் ரானா, பிரியங்கா சவுத்ரி, அனிதா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனைநடத்தப்பட்டது.

The post காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால்மாலிக் உதவியாளர் வீடுகளில் சிபிஐ சோதனை appeared first on Dinakaran.

Tags : Former governor ,Kashmir ,Satyapalmalik ,CPI ,New Delhi ,Former ,Governor ,Satyapal Malik ,Union Government ,Pulwama ,Dinakaran ,
× RELATED கொத்துக் கொத்தாக வாக்குரிமை மறுப்பு : தமிழிசை சௌந்தரராஜன் வேதனை