×

பைனலில் இன்டர் மிலன்

யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இன்டர் மிலன் அணி தகுதி பெற்றுள்ளது. இத்தாலியின் சான் சிரோ ஸ்டேடியத்தில் ஏசி மிலன் அணியுடன் நடந்த அரையிறுதி 2ம் கட்ட ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற இன்டர் மிலன், ஏற்கனவே முதற்கட்ட ஆட்டத்தில் 2-0 என வென்றிருந்ததால் 3-0 என்ற மொத்த கோல் அடிப்படையில் அபாரமாக வென்று பைனலுக்கு முன்னேறியது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு இன்டர் மிலன் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. பைனலுக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் இன்டர் மிலன் வீரர்கள்.

The post பைனலில் இன்டர் மிலன் appeared first on Dinakaran.

Tags : Inter Milan ,UEFA Champions League football tournament ,Italy ,Dinakaran ,
× RELATED யுஎஸ் ஓபன் டென்னிஸ்: நான்கரை மணி நேரம்...