×

இத்தாலி ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் கலினினா

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, உக்ரைன் வீராங்கனை அன்ஹெலினா கலினினா தகுதி பெற்றார்.பிரேசில் நட்சத்திரம் ஹதாத் மாயாவுடன் (26 வயது, 10வது ரேங்க்) காலிறுதியில் மோதிய கலினினா (26 வயது, 47வது ரேங்க்) 6-7 (2-7), 7-6 (8-6), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 3 மணி, 41 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு காலிறுதியில் சீனாவின் கின்வென் ஸெங்குடன் (20 வயது, 21வது ரேங்க்) மோதிய ரஷ்ய நட்சத்திரம் வெரோனிகா குதெர்மதோவா (26 வயது, 5வது ரேங்க்) 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செக் குடியரசின் கரோலினா முச்சோவாவுடன் (26 வயது, 52வது ரேங்க்) மோதிய ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா (25 வயது, 35வது ரேங்க்) 6-4, 6-7 (4-7), 6-2 என்ற செட் கணக்கில் வென்றார். ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த இப்போட்டி 3 மணி, 4 நிமிடத்துக்கு நடந்தது. மற்றொரு 4வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-3, 6-4 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் டோனா வேகிச்சை (26 வயது, 24வது ரேங்க்) வீழ்த்தினார்.

The post இத்தாலி ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் கலினினா appeared first on Dinakaran.

Tags : Galinina ,Italian Open ,Rome ,Anhelina Kalinina ,Kalinina ,Dinakaran ,
× RELATED உடல் நலம் தேறினார் போப் பிரான்சிஸ் தலைமையில் ஈஸ்டர் ஞாயிறு