×

சில்லி பாயின்ட்…

* லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த தோல்விக்கு, தாங்கள் வகுத்த வியூகத்துக்கு ஏற்ப பந்துவீச்சாளர்கள் செயல்படாததே முக்கிய காரணம் என்று மும்பை அணி பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் குற்றம்சாட்டியுள்ளார்.

* நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய அணி தொடக்க வீரர்கள் 5 பேர் மிகச் சிறப்பாக செயல்பட்டு ரன் குவிப்பில் அசத்தி வருகின்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஷுப்மன் கில் 13 போட்டியில் 576 ரன் (அதிகம் 101, சராசரி 48.00), ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்) 13 போட்டியில் 575 ரன் (அதிகம் 124, சராசரி 47.91), ருதுராஜ் (சிஎஸ்கே) 13 போட்டியில் 425 ரன் (அதிகம் 92, சராசரி 38.63), இஷான் கிஷன் (மும்பை) 13 போட்டியில் 425 ரன் (அதிகம் 75, சராசரி 32.69), பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் 9 போட்டியில் (டெல்லி போட்டிக்கு முன்) 356 ரன் (அதிகம் 99*, சராசரி 50.85) விளாசியுள்ளனர்.

* இத்தாலியின் இமோலா நகரில் நடைபெற இருந்த எமிலியா ரோமாக்னா பார்முலா 1 கிராண்ட் பிரீ கார் பந்தயம், மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

* ஷாங்காய் நகரில் நடந்து வரும் உலக கோப்பை வில்வித்தை தொடர் 2ம் கட்ட போட்டியின் மகளிர் காம்பவுண்டு குழு பிரிவில் ஜோதி சுரேகா, அதிதி ஸ்வாமி, அவ்னீத் கவுர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி காலிறுதியில் 228-231 என்ற புள்ளிக் கணக்கில் துருக்கி அணியிடம் போராடி தோற்றது.

* சுதிர்மான் கோப்பை பேட்மின்டன் தொடரின் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்த இந்திய அணி, சி பிரிவில் விளையாடிய கடைசி மோதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4-1 என்ற கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்றது.

* பெங்களூருவில் அடுத்த மாதம் நடக்க உள்ள தெற்காசிய கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் (ஜூன் 21-ஜூலை 4) ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. ஏ பிரிவு: இந்தியா, பாகிஸ்தான், குவைத், நேபாளம். பி பிரிவு: லெபனான், மாலத்தீவு, பூட்டான், வங்கதேசம்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Lucknow Super Giants ,Mumbai Indians ,Dinakaran ,
× RELATED ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா: இன்றைய நாளில் அனல் பறக்கும் 2 போட்டிகள்!