×

எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் வெற்றி பெற்றிட முத்தமிழ்ச்செல்விக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் வெற்றி பெற்றிட முத்தமிழ்ச்செல்விக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் 7200 மீட்டர் உயரத்தை கடந்து வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை முத்தமிழ்ச்செல்வியின்ன் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

மேலும், எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் மீதமுள்ள தூரத்தையும் வெற்றிகரமாக கடந்து, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தமிழ்நாட்டின் முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றிட தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதுடன், எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தை வெற்றிகரமாக முடித்து தன்னை நேரில் சந்திக்க வருமாறும் முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.

The post எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் வெற்றி பெற்றிட முத்தமிழ்ச்செல்விக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Muthamilchelvi ,Everest ,Stalin ,Chennai ,Tamil Nadu ,M.K. Stalin ,Everest… ,
× RELATED தனிக்கட்சி தொடங்குகிறார் ஓ.பன்னீர்செல்வம்?