×

கோத்தகிரி அருகே காட்டுமாடு தாக்கி சிறுவன் படுகாயம்: நீர் வீழ்ச்சியை ரசிக்க சென்றபோது சோகம்

கோத்தகிரி: கோத்தகிரி அருகே நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்க சென்ற மாணவனை காட்டுமாடு தாக்கியது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் சஞ்சய் (16). இவர் கடந்த மாதம் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி உள்ளார். இந்நிலையில், அவர் தனது நண்பர்கள் 3 பேருடன் நேற்று மாலை சுண்டட்டி நீர்வீழ்ச்சியை காண சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக புதர் மறைவில் இருந்து திடீரென வெளியே வந்த காட்டு மாடு சஞ்சய்யின் முதுகில் தனது கொம்பால் தாக்கி விட்டு, அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடிச் சென்று மறைந்தது.

இதில் பலத்த காயமடைந்த சஞ்சய்யை நண்பர்கள் மீட்டு நெடுகுளா ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சஞ்சயை அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

The post கோத்தகிரி அருகே காட்டுமாடு தாக்கி சிறுவன் படுகாயம்: நீர் வீழ்ச்சியை ரசிக்க சென்றபோது சோகம் appeared first on Dinakaran.

Tags : Gothagiri ,Kotakiri ,Kothagiri ,Nilgiri District ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்