×

ரூ.25 கோடி பேர வழக்கில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே நாளை ஆஜராக சிபிஐ சம்மன்

மும்பை: ரூ.25 கோடி பேர வழக்கில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே நாளை ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. போதைப்பொருள் வழக்கில் இருந்து ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை விடுவிக்க ரூ.25 கோடி கேட்டதாக புகார் எழுந்தது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகனை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்து ரூ.25 கோடி பறிக்க முயன்றது அம்பலமானது. ஷாருக்கான் மகனை கைதுசெய்த அதிகாரி சமீர் உள்ளிட்டோர் மீது சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. ஷாருக்கானிடம் ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டு பின்னர் ரூ.18 கோடி என முடிவு செய்யப்பட்டதாகவும் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. முன்பணமாக ரூ.50 லட்சத்தை ஆர்யன்கான் வழக்கில் நேரடி சாட்சியான கே.பி.கொசாவி பெற்றதாகவும் சிபிஐ தகவல் வெளியாகியுள்ளது.

The post ரூ.25 கோடி பேர வழக்கில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே நாளை ஆஜராக சிபிஐ சம்மன் appeared first on Dinakaran.

Tags : Sameer Wankade ,Prevention of Drugs Division ,CBI Samman ,Mumbai ,PTI ,CBI ,Samman ,Ajar ,Samir Wankaday ,
× RELATED ஷாருக்கான் மகன் தொடர்பான ஊழல்...