×

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதியில் 32 ஆதரவற்றோர் மீட்பு: பாதுகாப்பு இல்லங்களில் ஒப்படைப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதியில் 32 ஆதரவற்றோர் மீட்கப்பட்டுள்ளனர். எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட முதியோர்கள், பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஊனமுற்றோர் என பலதரப்பட்டவர்கள் உணவுக்காககவும், அன்றாட தேவைக்களுக்காகவும் யாசிப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். மேலும் இரயில் நிலைய பிளாட்பாரங்களிலேயே தங்கியிருந்து வருகிறார்கள். இவர்களில் சிலர் பிள்ளைகளால், உறவினர்களால் மற்றும் உறவுகளால் கைவிடப்பட்டவர்கள் ஆவார்கள்.

இவர்களின் நலனை கருத்தில் கொண்டு மறு வாழ்வு அளிக்கும் பொருட்டு Strனை vision என்ற NGO அமைப்புடன் இணைந்து இன்று காலை V. வனிதா, காவல்துறை கூடுதல் இயக்குனர், இருப்புப்பாதை சென்னை ஆலோசனையின் பேரில், பொன்ராமு, காவல் கண்காணிப்பாளர், இருப்புப்பாதை, சென்னை அவர்களின் மேற்பார்வையில் அனைவரையும் மீட்டு உணவளித்து அவரவர் நிலைமைக்கு ஏற்ப தங்கும் இல்லங்களுக்கு (Shaitar homes} அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று நடந்த மீட்பு நடவடிக்கையில் ஒரு மாற்றுதிறனாளி உட்பட 23 ஆண்கள், 8 பெண்களை மீட்டு பாதுகாப்பு இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டனர்.

The post சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதியில் 32 ஆதரவற்றோர் மீட்பு: பாதுகாப்பு இல்லங்களில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Central Railway Station ,Chennai ,MM GG R.R. ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!