சென்னை: சென்னையில் பல இடங்களில் மசாஜ் சென்டர்கள், தங்கும் விடுதிகள் மற்றும் சர்வீஸ் அப்பார்ட்மெண்டுகளில் அப்பாவி இளம் பெண்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி வரவழைத்து அவர்களை விபச்சார தொழிலுக்கு ஈடுபடுத்துவதை தடுக்க வேண்டி, சென்னை சிந்தாதிரிபேட்டை, விபச்சார தடுப்பு பிரிவானது (ITPU) 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 2023 வரை Locanto app, Just dial, Viva Street app போன்ற இணைய தளங்கள் மூலமாகவும், குருஞ்செய்திகள் மற்றும் இரகசிய தகவல்கள் மூலமாகவும் சுமார் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் ஆண் மற்றும் பெண் என மொத்தம் 55 குற்றவாளிகளை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை, புழல், மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் அவர்களது பிடியில் இருந்த 94 தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு அவர்களது பாதுகாப்பு கருதி சென்னை, மயிலாப்பூர் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் 6 குற்றவாளிகளின் மீது தடுப்பு காவல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விபச்சார குற்றங்களுக்கு வழிவகை செய்யும் இணைய தளங்களை முடக்கும் முயற்சியாக Locanto செயலி மற்றும் இணையதள பக்கத்தை முடக்குவதற்கு மாநில சைபர் கிரைம் பிரிவு மூலமாக (Meity) Ministry of Electronics and information Technology, Govt of India மற்றும் Google நிறுவனத்திற்கு வேண்டுகோள் கொடுக்கப்பட்டுள்ளது.
Clog Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 2021 மூலம் Locanto செயலி மற்றும் இணையதள பக்கத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு அரசின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறையின் (Information Technology and Digital Service Department, Tamil Nadu) செயலாளருக்கு வேண்டுகோள் கொடுக்கப்பட்டுள்ளது.
The post மசாஜ் சென்டர்கள், தங்கும் விடுதிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: 55 பேர் கைது appeared first on Dinakaran.
