×

கேரள அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கும் நிகழ்ச்சிகள்: கோட்டயத்தில் நடைபெற்ற வண்ணமயமான பேரணி

திருவனந்தப்புரம்: கேரள அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கும் விதமாக கோட்டயத்தில் நடைபெற்ற வண்ண மையமான பேரணி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கேரளாவில் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடித்த பினராய் விஜயன் தலைமையிலான அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி எங்கே கேரளம் என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக கோட்டயத்தில் பாரம்பரிய நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற வண்ண மையமான பேரணி நடைபெற்றது. வரும் 22-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தினமும் புகழ் பெற்ற கலைஞர்களின் இசை நிகழ்ச்சி, உணவு திருவிழா, அரசின் 200-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள், கருத்தரங்கு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றனர்.

அரசின் மக்கள் நலம் சார்ந்த பணிகள், சுற்றுலா துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக என்கே கேரளம் நிகழ்ச்சிக்கு கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கோட்டையம் மாவட்டத்தில் நடைபெற்ற பிரமாண்ட பேரணி முக்கிய சாலைகள் வழியாக வந்து நாகப்பட மைதானத்தில் நிறைவடைந்தது.

The post கேரள அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கும் நிகழ்ச்சிகள்: கோட்டயத்தில் நடைபெற்ற வண்ணமயமான பேரணி appeared first on Dinakaran.

Tags : Kottayam Thiruvananthapuram ,Kottayam ,Government of Kerala ,
× RELATED கடனை கேட்டு பெண்ணை தாக்கிய 4 பேர் கைது