×

பத்திரப்பதிவை ரத்து செய்யக் கோரி அளிக்கும் விண்ணப்பங்களை கையாள விரிவான நடைமுறைகளை வகுக்க வேண்டும்: பதிவுத்துறை ஐ.ஜி.க்கு ஐகோர்ட் ஆணை

சென்னை: பத்திரப்பதிவை ரத்து செய்யக் கோரி அளிக்கும் விண்ணப்பங்களை கையாள விரிவான நடைமுறைகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பதிவுத்துறை ஐ.ஜி.க்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மோசடியாக பதிவு செய்யப்பட்ட நில விற்பனை பத்திரத்தின் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. மாவட்ட பதிவாளரிடம் அளித்த விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை கோரி ராஜ சுலோச்சனா என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

The post பத்திரப்பதிவை ரத்து செய்யக் கோரி அளிக்கும் விண்ணப்பங்களை கையாள விரிவான நடைமுறைகளை வகுக்க வேண்டும்: பதிவுத்துறை ஐ.ஜி.க்கு ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : Registry Department of the United Nations ,Chennai ,Chennai High Court ,iCourt ,Dinakaran ,
× RELATED சென்னை உயர்நீதிமன்றம் நாளை இயங்கும்: பதிவாளர் அறிவிப்பு