×

ஷேர் ஆட்டோ மீது லாரி மோதியதில் 5 பெண் தொழிலாளர்கள் பரிதாப பலி: 18 பேர் படுகாயம்

ஷேர் ஆட்டோ மீது லாரி மோதியதில் 5 பெண் தொழிலாளர்கள் பரிதாப பலி: 18 பேர் படுகாயம்

திருமலை: ஷேர் ஆட்டோ மீது லாரி மோதியதில் 5 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நரசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமாேனார் பல்வேறு பகுதிகளில் கூலி வேலைக்கு ஷேர் ஆட்டோவில் தினசரி சென்று வருகின்றனர். இதன்படி இன்று காலை நரசாபுரத்தை சேர்ந்த 23 தொழிலாளர்களுடன் ஷேர் ஆட்டோ ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் புலிபாடுக்கு கிராமத்துக்கு சென்றது.

அப்போது பல்நாடு மாவட்டம் தாகேபள்ளி அருகே ஆட்டோ சென்றபோது, எதிரே வந்த லாரி, அந்த ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ நொறுங்கியது. இந்த ஆட்டோவில் பயணம் செய்த புக்யாபத்மா(25), வர்த்யா சக்ரி (32), இஸ்லாவத் மஞ்சுளா (25), பூக்யா சோனி (65), மாலோத் கவிதா (33) ஆகிய 5 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஆட்டோ டிரைவர் உட்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தை பார்த்ததும் அந்த பகுதி மக்கள் வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குர்ஜாலா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த குரஜாலா போலீசார் சென்று சடலங்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

The post ஷேர் ஆட்டோ மீது லாரி மோதியதில் 5 பெண் தொழிலாளர்கள் பரிதாப பலி: 18 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி