×

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீரகனூர் ஏரிக்கரையில் காலை முதலே கள்ளச்சாராய பாக்கெட்டுகள் விற்பனை: போலீசார் தீவிர விசாரணை

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீரகனூர் ஏரிக்கரையில் காலை முதலே கள்ளச்சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராய குடித்து 22 பேர் உயிர் இழந்த சம்பம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக போலீசார் கள்ளச்சாராயத்தை ஒழிக்க அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று சுமார் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி சுமார் 1,500 கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாராயம் கச்சப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தும் காவல்துறை வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் 22 பேர் பலியான சம்பவம் கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஆத்தூர் பகுதிக்கு உட்பட்ட கல்வராயன் மலை அடிவாரத்தில் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்தும், 5 தனிப்படை அமைத்து தீவிரமாக காவல்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர். ஆனால் போலீசாருக்கு சவால் விடும் விதமாக வீரகனூர் ஏரிக்கரையில் இன்று அதிகாலை கள்ளச்சாராயம் விற்கப்படும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீரகனூர் ஏரிக்கரையில் காலை முதலே கள்ளச்சாராய பாக்கெட்டுகள் விற்பனை: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Veerakanur Lake ,Aathur ,Salem district ,Salem ,Dinakaran ,
× RELATED ஆத்தூர் விவசாயி கொலை வழக்கில் வாலிபர்...