×

ஓட்டல், பெட்டிக்கடைகளில் மது விற்பனையை தடுக்க ஊராட்சி தலைவர் மனு

 

பல்லடம்: முறைகேடாக நடந்து வரும் மது விற்பனையை தடுத்து நிறுத்த கோரி மங்கலம் போலீசுக்கு இச்சிப்பட்டி ஊராட்சி தலைவர் வேல்மணி புகார் மனு அளித்துள்ளார். பல்லடம் ஒன்றியம் இச்சிப்பட்டி ஊராட்சியில் உள்ள சில உணவகங்கள் மற்றும் பெட்டிக்கடைகளில், முறைகேடான மது விற்பனை நடந்து வருவதாகவும், போலீசார் இதை கண்டு கொள்வதில்லை என்றும் சமீபத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தின் போது பொதுமக்கள் குற்றம்சாட்டினர். முறைகேடான மது விற்பனையை தடுத்து நிறுத்த கோரி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முன் வைத்து இச்சப்பட்டி ஊராட்சி தலைவர் வேல்மணி மங்களம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.

The post ஓட்டல், பெட்டிக்கடைகளில் மது விற்பனையை தடுக்க ஊராட்சி தலைவர் மனு appeared first on Dinakaran.

Tags : Panchayat ,president ,Palladam ,Ichipatti panchayat ,Mangalam police ,
× RELATED கல்வி நிறுவனங்களில் களைகட்டிய பொங்கல் விழா