×

மும்மூர்த்தி நகர் பகுதியில் பாறைக்குழி-பாதாள சாக்கடை பணிகளை மேயர் ஆய்வு

 

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட 8-வது வார்டு மும்மூர்த்தி நகரில் பாறைக்குழி மற்றும் தங்கமாரியம்மன் கோவில் 2-வது வீதியில் நடைபெற்று வரும், பாதாள சாக்கடை கால்வாய் பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது பாறைக்குழியில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். மேலும், பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் மண்டல தலைவர் கோவிந்தராஜ், வட்ட செயலாளர் வெள்ளைசாமி, கவுன்சிலர் வேலம்மாள் காந்தி, தாமோதரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

The post மும்மூர்த்தி நகர் பகுதியில் பாறைக்குழி-பாதாள சாக்கடை பணிகளை மேயர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Mummurthy Nagar ,Tirupur ,Thangamariamman Temple ,Ward ,Zone ,Tirupur Corporation ,Dinakaran ,
× RELATED ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நியாயமான கூலி உயர்வை பெற்றுத்தர வேண்டும்