×

கோவை திரும்பிய ஆர்.ஏ.எப் படை வீரர்கள் குளங்களில் கழிவுகள் அகற்ற கோரிக்கை

 

கோவை: கோவை நொய்யல் நீராதாரத்தில் 28 குளங்கள், 20 தடுப்பணைகள் உள்ளது. நகரில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நரசாம்பதி, செல்வாம்பதி உட்பட 9 குளங்கள் பராமரிப்பிற்காக மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டில் இருந்து மாநகராட்சி நிர்வாகம் நரசாம்பதி, செல்வாம்பதி, கிருஷ்ணாம்பதி, முத்தண்ணகுளம், செல்வசிந்தாமணி, உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சிகுளம், சிங்காநல்லூர் குளம் போன்றவற்றை பராமரித்து வருகிறது. இந்த குளங்களில் பலமுறை ஆகாய தாமரை அகற்றப்பட்டது. முத்தண்ணகுளம், குறிச்சிகுளம், நரசாம்பதி, செல்வாம்பதி, கிருஷ்ணாம்பதி குளத்தில் ஆகாய தாமரை அகற்ற சுமார் ரூ. 6 கோடி செலவிடப்பட்டது.

தற்போது செல்வசிந்தாமணி, கிருஷ்ணாம்பதி, உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாய தாமரைகள் அதிகமாகிவிட்டது. பிளாஸ்டிக் குப்பை கழிவுகளும் அதிகரித்து வருகிறது. கழிவுகளை அகற்றாமல் விட்டதால் துர்நாற்றம் வீசுகிறது. குளத்தில் நீர் கெட்டுப்போய் நிறம் மாறிவிட்டது. சில இடங்களில் கருப்பு நிறமாக நீர் காட்சியளிக்கிறது. பெரியகுளம், வாலாங்குளத்தில் மழை நீர் தடுக்கப்பட்டு சாக்கடை நீர் மட்டுமே விடப்பட்டதால், கருப்பு நிறத்தில் நீர் தேக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. வறட்சி அதிகரித்த நிலையில் செல்வசிந்தாமணி, பெரியகுளம், வாலாங்குளத்தில் முழு அளவில் சாக்கடை நீர் திருப்பி விடப்பட்டுள்ளது. கழிவு நீர் பண்ணைக்கு செல்ல வேண்டிய கழிவு நீர் குளங்களுக்கு செல்லும் நிலைமை இருக்கிறது. இதனால் குளங்களில் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

The post கோவை திரும்பிய ஆர்.ஏ.எப் படை வீரர்கள் குளங்களில் கழிவுகள் அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : RAF ,Coimbatore ,Coimbatore Noyal ,Narasampathi ,Public Works Department ,Dinakaran ,
× RELATED கோவை பந்தய சாலை நடைபாதையில் இருந்த...