×

மாநில அளவிலான டென்னிஸ் போட்டி

 

கோவை: எஸ்வி டென்னிஸ் அகாடமி சார்பில், டென்னிஸ் பயிற்சியாளர் செல்வம் நினைவாக மாநில அளவிலான ‘செல்வம் நினைவு கோப்பை’ போட்டிகள் வெள்ளலுார் எஸ்வி டென்னிஸ் அகாடமி மைதானத்தில் நடந்தது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். 10, 12, 14, 16 ஆகிய வயது பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

10 வயது பிரிவு இறுதிப்போட்டியில் ஆதிஷ் 8-4 என்ற புள்ளிக்கணக்கில் முகமது பர்ஸினை வென்றார். 12 வயது பிரிவில், தேவ் அத்வைத் 8-4 என்ற புள்ளிக்கணக்கில் நல்யாழினியை வென்றார். 14 வயது பிரிவில் பவிஷ்ணு 8-6 என்ற புள்ளிக்கணக்கில் ஆதர்ஷை வென்றார். 16 வயது பிரிவில், சஞ்சீவ் 8-3 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்சரணை வென்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ரொக்கம், கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன.

The post மாநில அளவிலான டென்னிஸ் போட்டி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Selvam Memorial Cup ,Selvam ,SV Tennis Academy ,Level Tennis Tournament ,Dinakaran ,
× RELATED செப்.26-ல் சென்னை கோவை வந்தே பாரத்...