×

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் எதிரொலி பப்பாளி சாகுபடிக்கு மாறும் கோவில்பட்டி விவசாயிகள்

கோவில்–பட்டி, மே 17: மக்–காச்–சோ–ளத்–தில் படைப்–புழு தாக்–கு–தல் எதி–ரொ–லி–யாக கோவில்–பட்டி பகுதி விவ–சா–யி–கள், பப்–பாளி சாகு–ப–டிக்கு மாறி வரு–கின்–ற–னர். தூத்–துக்–குடி மாவட்–டத்–தில் சுமார் 5 லட்–சம் ஏக்–கர் பரப்–ப–ள–வில் உளுந்து, பாசி, கம்பு, மக்–காச்–சோ–ளம், சூரி–ய–காந்தி, கொத்–த–மல்லி, வெங்–கா–யம் போன்ற பல்–வேறு பயிர்–கள் பயி–ரி–டப்–ப–டு–கின்–றன. இதில் 30 சத–வீ–தம் மக்–காச்–சோ–ளம் சாகு–ப–டி–யா–கும். கடந்த 4 ஆண்–டு–களுக்கு முன்–பு–வரை மக்–காச்–சோ–ளம் சாகு–படி, விவ–சா–யி–களுக்கு மிக–வும் கைகொ–டுத்–தது. இதற்கு பரா–ம–ரிப்பு பணி சுல–ப–மா–கும். இந்–நி–லை–யில் 4 ஆண்–டு–க–ளாக மக்–காச்–சோ–ளப் பயி–ரில் குருத்–துப்–பூச்சி எனப்–ப–டும் அமெ–ரிக்–கன் படைப்–புழு, பயிர் முளைத்து 25வது நாளில் குருத்–துப்–ப–கு–தி–யில் முட்–டை–யிட்டு இனப்–பெ–ருக்–கம் செய்து தண்–டுப் பகு–தியை முழு–வ–தும் அழித்து தின்று விடு–கி–றது. இத–னால் குருத்–துப்–பூச்–சியை அழிக்க 25 மற்–றும் 40வது நாளில் விலை அதி–க–மான மருந்து தெளிக்க வேண்டி உள்–ளது. இவை தவிர இரு முறை களை பறிக்க வேண்டி இருக்–கி–றது. களை பறிக்க, மருந்து தெளிக்க, ஒரே சம–யத்–தில் அனைத்து விவ–சா–யி–களுக்–கும் கூலி ஆட்–கள் தேவைப்–ப–டு–வ–தால் வேலைக்கு ஆட்–கள் பற்–றாக்–குறை என விவ–சா–யி–கள் சிர–மப்–பட வேண்டி உள்–ளது. விளை–வித்த மக்–காச்–சோ–ளம் மக–சூல், விலை–யும் சீராக இருப்–ப–தில்லை. அர–சும் குறைந்த ஆதார விலையை நிர்–ண–யம் செய்–வ–தில்லை. இது–போன்ற பல்–வேறு கார–ணங்–க–ளால் பயிர் சாகு–படி தொடர்ந்து செய்ய முடி–யாத நிலை ஏற்–பட்–டுள்–ளது.

இந்–நி–லை–யில் தோட்–டப் பாசன விவ–சா–யி–கள், மக்–காச்–சோ–ளம் சாகு–ப–டிக்கு மாற்–றாக இந்–தாண்டு பப்–பாளி சாகு–ப–டிக்கு மாறி வரு–கின்–ற–னர். மேலும் பப்–பாளி சாகு–படி மற்–றும் பரா–ம–ரிப்பு சுல–பம் என்–ப–தால் கோவில்–பட்டி பகு–தி–யில் சில கிரா–மங்–க–ளில் பப்–பாளி சாகு–படி மும்–மு–ர–மாக நடந்து வரு–கி–றது. ஏக்–க–ருக்கு ஆயி–ரம் கன்–று–கள் வீதம் நடு–கின்–ற–னர். பப்–பாளி 10வது மாதம் காய்ப்–புக்கு வந்–து–வி–டு–கி–றது.
ஒரு மரத்–தில் 50 பப்–பாளி பழம் வரை காய்க்–கி–றது. பொது–வாக பப்–பாளி என்–பது அன்–றா–டம் உண்–ணக்–கூ–டிய பழ–மா–கும். ஆனால் அது–போல் இல்–லா–மல் இப்–பு–திய வகை பப்–பாளி விளைந்த காய் பரு–வத்–தில் அதன் தோள் மீது பிளே–டால் கீறி விட்டு அதில் சுரக்–கும் பால் போன்ற நீரை பாத்–தி–ரத்–தில் பிடித்து கேனில் நிரப்–பு–கின்–ற–னர். ஒரு ஏக்–க–ருக்கு 50 கிலோ வரை அந்–நீர் கிடைக்–கி–றது. அதனை பதம் செய்து மார–டைப்பு, எலும்பு முறிவு, சர்க்–கரை நோய், நீர், வாதம் போன்ற பல்–வேறு நோய்–களை குணப்–ப–டுத்த மாத்–தி–ரை–கள், டானிக், பொடி தயா–ரிக்–கப் பயன்–ப–டு–கி–றது. இவை தவிர முகக்–கி–ரீம், கேசரி பவு–டர், கேக் பவு–டர் என எண்–ணற்ற பொருட்–கள் தயா–ரிக்–க–வும் பயன்–ப–டுத்–தப்–ப–டு–கி–றது. பப்–பாளி மரத்–தில் 4 ஆண்–டு–கள் வரை பயன் கிடைக்–கும். 10வது மாதம் முதல் ஒவ்–வொரு 15 நாட்–கள் இடை–வெ–ளி–விட்டு பப்–பா–ளியை கீறி அதன் நீரை பாத்–தி–ரத்–தில் பிடிக்–கின்–ற–னர். இதன் விலை கிலோ ரூ.130 விவ–சா–யி–க–ளி–டம் வாங்–கப்–ப–டு–கி–றது. பப்–பாளி சாகு–ப–டிக்கு குறைந்த வேலை ஆட்–களே போது–மா–ன–தா–கும். முதற்–கட்–ட–மாக தோட்ட பாசன விவ–சா–யி–கள், பப்–பாளி சாகு–ப–டி–யில் ஈடு–பட்டு வரும் நிலை–யில், மானா–வாரி விவ–சா–யி–களும் பப்–பாளி சாகு–ப–டிக்கு தயா–ராகி வரு–கின்–ற–னர்.

The post மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் எதிரொலி பப்பாளி சாகுபடிக்கு மாறும் கோவில்பட்டி விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Koilpatti ,Kovil-Batti ,Mak-Kach-So-Lat ,Thak-Ku ,Ethi ,Li-Yaga ,Kovil ,-Batti ,Kovilpatti ,
× RELATED கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்...