×

அதிகாரிகளை கண்டதும் போலி டாக்டர் எஸ்கேப்

தர்–ம–புரி, மே 17: கடத்–தூர் அருகே பிஎஸ்சி படித்–து–விட்டு நோயா–ளி–களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்–து–வர் அதி–கா–ரி–களை பார்த்–த–தும் தப்–பி–யோ–டி–னார். தர்–ம–புரி மாவட்–டம், கடத்–தூர் பகு–தி–யில் உள்ள கிளி–னிக்–கில் மருத்–து–வம் படிக்–கா–மல் ஆங்–கி–லம் மருத்–து–வம் பார்ப்–ப–தாக தர்–ம–புரி மருத்–துவ நலப்–ப–ணி–கள் இணை இயக்–கு–னர் சாந்–திக்கு ரக–சிய தக–வல் கிடைத்–தது. அதன்–பே–ரில், சாந்தி தலை–மை–யி–லான மருத்–துவ குழு–வி–னர் கடத்–தூர் விநா–ய–கர் கோயில் அரு–கே–யுள்ள கிளி–னிக்–கிற்கு சென்–ற–னர். அப்–போது அங்–கி–ருந்த நபர், மருத்–துவ குழு–வி–னரை பார்த்–த–தும் ஓட்–டம் பிடித்–தார். இதை–ய–டுத்து, கிளி–னிக்–கில் ஆய்வு செய்–த–போது அவர் போலி மருத்–து–வம் பார்த்து வந்–தது தெரிந்–தது. இத–னைத்–தொ–டர்ந்து அங்–கி–ருந்த மருந்து பாட்–டில்–கள், ஊசி–கள், மாத்–திரை உள்–ளிட்ட மருத்–துவ உப–க–ர–ணங்–களை மருத்–துவ குழு–வி–னர் பறி–மு–தல் செய்–த–னர். இது–கு–றித்து பாப்–பி–ரெட்–டிப்–பட்டி அரசு மருத்–து–வ–மனை மருத்–துவ அலு–வ–லர் அருண் கடத்–தூர் போலீ–சில் புகா–ர–ளித்–தார். அதில், கடத்–தூ–ரைச் சேர்ந்த கோவிந்–தன் மகன் பன்–னீர்(48) என்–ப–வர் பிஎஸ்சி படித்–து–விட்டு ஆங்–கில மருத்–து–வம் பார்த்து வந்–துள்–ளார். தலை–ம–றை–வா–கி–யுள்ள அவரை கைது செய்து நட–வ–டிக்கை எடுக்க வேண்–டும் என தெரி–வித்–துள்–ளார். அதன்–பே–ரில், போலீ–சார் வழக்–குப்–ப–திந்து தலை–ம–றை–வாக உள்ள பன்–னீரை தேடி வரு–கின்–ற–னர்.

The post அதிகாரிகளை கண்டதும் போலி டாக்டர் எஸ்கேப் appeared first on Dinakaran.

Tags : Dhar-Ma-Puri ,Marut ,BSC ,Katad-Dur ,Dinakaran ,
× RELATED சென்னை பல்கலைக்கழகத்தின் BSC(Blended) படிக்க விண்ணப்பிக்கலாம்