- புதுவை மாநில மதுபானம்
- மரக்–க–ணம்
- வம்-ப-மேடு
- பாகு-டி
- ஏக்–கி–யர்–குப்–பம்
- மீனா-வர்
- புதுவை மாநிலம்
- தின மலர்
மரக்–கா–ணம், மே 17: மரக்–கா–ணம் அருகே எக்–கி–யர்–குப்–பம் மீன–வர் கிரா–மம் அரு–கில் உள்ள வம்–பா–மேடு பகு–தி–யில் விற்–பனை செய்த கள்ள சாரா–யத்தை குடித்த 13 பேர் பரி–தா–ப–மாக உயி–ரி–ழந்–த–னர். பலர் உயி–ருக்கு ஆபத்–தான நிலை–யில் தொடர்ந்து மருத்–து–வ–ம–னை–யில் சிகிச்சை பெற்று வரு–கின்–ற–னர். இவர்–கள் குடித்த சாரா–யத்தை ஆய்வு செய்–த–போது அந்த சாரா–யம் தொழிற்–சா–லை–களுக்கு மட்–டுமே பயன்–ப–டுத்–தப்–ப–டும் மெத்–த–னால் வகையை சேர்ந்த எரி சாரா–யம் என முதல் கட்ட விசா–ர–ணை–யில் போலீ–சா–ருக்கு தெரி–ய–வந்–தது. இதை தொடர்ந்து அங்கு சாரா–யம் விற்–பனை செய்த அம–ரன்(24), முத்து(38), ஆறு–மு–கம்(47) ரவி(50) மண்–ணாங்–கட்டி(52) ஆகி–யோரை கைது செய்து விசா–ரணை நடத்–தி–னர்.
அதில், புதுவை மாநி–லம் முத்–தி–யால்–பேட்டை பகு–தியை சேர்ந்த பர்–கத்–துல்லா என்ற ராஜா(48), தட்–டாஞ்–சா–வ–டியை சேர்ந்த ஏழு–மலை(50) ஆகிய 2 பேர்–தான் எங்–களுக்கு மொத்–த–மாக சாரா–யத்தை விநி–யோ–கம் செய்–வார்–கள். அவர்–க–ளி–டம் வாங்கி வந்து தான் வழக்–கம் போல் அன்–றும் விற்–பனை செய்–தோம். அவர்–களுக்–குத்–தான் தெரி–யும், அது எந்த வகை சாரா–யம் என பிடி–பட்ட சாராய வியா–பா–ரி–கள் கூறி–யுள்–ள–னர்.இதை தொடர்ந்து தனிப்–படை போலீ–சார் புதுவை மாநி–லத்–திற்கு சென்று சம்–பந்–தப்–பட்ட 2 பேரை–யும் பிடித்து விசா–ரணை நடத்தி வரு–கின்–ற–னர். இவர்–க–ளி–டம் இந்த சாரா–யம் எந்த மாநி–லத்–தில் இருந்து கடத்தி வரப்–பட்–டது. இதனை மொத்–த–மாக விற்–பனை செய்–யும் வியா–பா–ரி–கள் யார், யார், அவர்–கள் எங்கு உள்–ள–னர், அவர்–க–ளின் பின்–பு–லத்–தில் யார் உள்–ள–னர் என ரக–சிய விசா–ரணை நடத்தி வரு–கின்–ற–னர். இவர்–கள் கூறி–னால் மட்–டுமே அந்த சாரா–யம் எந்த தொழிற்–சா–லை–யில் இருந்து விற்–ப–னைக்கு வந்–துள்–ளது என தெரி–ய–வ–ரும் என போலீ–சார் தெரி–வித்–த–னர்.
The post புதுவை மாநில சாராய வியாபாரிகள் சிக்கினர் appeared first on Dinakaran.