×

லஞ்சம் வாங்கிய அதிமுக ஊராட்சி தலைவர் கைது

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் கீழக்கோட்டையை சேர்ந்தவர் பாலாஜி (28). இவர் வீட்டு வரி ரசீதில் பெயர் மாற்றம் செய்ய கல்லல் ஊராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். இதற்கு ரூ.13 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய பணத்தை தருவதற்காக கல்லல் ஊராட்சி தலைவரும், கல்லல் அதிமுக நகர செயலாளருமான ராமநாச்சியப்பனை, பாலாஜி அணுகியுள்ளார். அவர், டிரைவர் சங்கரிடம் பணத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார். பாலாஜி ரூ.13 ஆயிரத்தை, டிரைவரிடம் கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார், ஊராட்சி தலைவர் ராமநாச்சியப்பன் மற்றும் அவரது டிரைவர் சங்கரை பிடித்து கைது செய்தனர்.

The post லஞ்சம் வாங்கிய அதிமுக ஊராட்சி தலைவர் கைது appeared first on Dinakaran.

Tags : AIADMK panchayat ,Karaikudi ,Balaji ,Kallal Keezhakottai ,Sivagangai district ,
× RELATED அணைவதற்கு முன் விளக்கு...