×

ஓபிஎஸ் இல்லையென்றால் ஆட்சி கவிழ்ந்திருக்கும் எட்டு தோல்வியை சந்தித்த எடப்பாடி பந்தயக்குதிரையா?: வைத்திலிங்கம் பதிலடி

தஞ்சாவூர்: ஓபிஎஸ் இல்லையென்றால் ஆட்சி கவிழ்ந்திருக்கும். எட்டு தோல்வியை சந்தித்த எடப்பாடி பந்தயக்குதிரையா என்று ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் கேள்வி எழுப்பி உள்ளார். தஞ்சாவூரில் ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று அளித்த பேட்டி: ஒரத்தநாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இ.பி.எஸ்., நான் ஒரத்தநாடு தொகுதிக்கு எதையும் கேட்கவில்லை என்றும், யாருக்கும் எந்த உதவியும் செய்யவில்லை என்றும் பொய் பேசியுள்ளார். இதே எடப்பாடி பழனிசாமி, 2021 தேர்தல் பிரசாரத்தில் வைத்திலிங்கம் திறமையானவர். இந்த தொகுதிக்கு நிறைய செய்தவர் என பேசினார். தற்போது என்ன பேசுகிறோம் என்பது கூட தெரியாமல், விரக்தியின் விளிம்பில் நின்று, தான் வகித்த பதவிக்கு மரியாதை இல்லாத அளவிற்கு பேசி சென்றுள்ளார். ஆயிரம் ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என பேசியுள்ளார். துரோகி ஓபிஎஸ்சும், துரோகி தினகரனும் இணைந்து விட்டார்கள் என கூறியுள்ளார். இதே எடப்பாடி பழனிசாமி தான், ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரனை வேட்பாளராக நிறுத்தி, அவரை போல் வல்லவர் இல்லை. அவரை போல் அரசியல் வித்தகர் இல்லை என பிரசாரத்தில் பேசினார்.

எட்டு தேர்தலில் தோல்வியை சந்தித்த எடப்பாடி பந்தயக்குதிரையா?. சந்தர்ப்ப சூழ்நிலையால் சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். தமிழகத்தில் முதல்வர் என்ற தகுதியே இல்லாத ஒரு நபர் அந்த பதவியில் இருந்தார் என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான். அவர்தான் நம்பிக்கை துரோகி. ஜெயலலிதாவின் மரணத்தில், நீதி விசாரணை வேண்டும் என மக்களின் கோரிக்கையை ஏற்று ஆணையம் அமைப்பதாக கூறினார். அப்போது வேண்டாம் என கூற வேண்டியது தானே?. தினகரன் 18 எம்.எல்.ஏ.,வுடன் சென்றபோது தன்னை காப்பாற்றிக்கொள்ள, ஓபிஎஸ்சுடன் பேச்சுவார்த்தை நடத்த பலமுறை சென்றவர்கள் நானும், தங்கமணி, வேலுமணியும் தான். நாங்கள் அவர்களை இணைக்காவிட்டால் ஆட்சி கவிழ்ந்திருக்கும். நன்றி இல்லாத மனிதர் என்றால், எடப்பாடி பழனிசாமி தான். நீதிமன்ற தீர்ப்பு வரட்டும். இரட்டை இலை சின்னம் இல்லாமல், எடப்பாடி பழனிசாமி தேர்தலை சந்தித்து எங்களை விட ஒரு ஓட்டு அதிகமாக வாங்கி விட்டால் நாங்கள் அரசியலிலிருந்து விலகி விடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஓபிஎஸ் இல்லையென்றால் ஆட்சி கவிழ்ந்திருக்கும் எட்டு தோல்வியை சந்தித்த எடப்பாடி பந்தயக்குதிரையா?: வைத்திலிங்கம் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Edappadi ,OPS ,Vaithilingam ,Thanjavur ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்