×

நிதின் கட்கரிக்கு மீண்டும் கொலை மிரட்டல்

புதுடெல்லி: ஒன்றிய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியின் இல்லத்திற்கு தொலைபேசி வழியே பேசிய நபர் ஒருவர், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதுபற்றி டெல்லி போலீசாரிடம், அமைச்சரின் அலுவலகம் தகவல் தெரிவித்து உள்ளது. இதுபற்றிய விவரங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து விசாரணை செய்தும் வருகின்றனர். கட்கரிக்கு மிரட்டல் வருவது இது முதன்முறையல்ல. கடந்த ஜனவரி 14ந்தேதி, நாக்பூரில் உள்ள கட்கரியின் பொது தொடர்பு அலுவலகத்திற்கு இதேபோன்ற மிரட்டலை விடுத்து உள்ளார். விசாரணையில், ஜெயேஷ் புஜாரி என்ற கந்தா என்பவர் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

The post நிதின் கட்கரிக்கு மீண்டும் கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Nitin Gadkari ,New Delhi ,Union Roads ,Transport Minister ,Dinakaran ,
× RELATED மாடி படி ஏறுங்க… தரையை சுத்தம்...