புதுடெல்லி: கேரளாவில் பருவமழை தாமதமாக அடுத்த மாதம் 4ம் தேதி தொடங்கலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும். கடந்த ஆண்டு மே 29ம் தேதி தொடங்கியது. 2021ம் ஆண்டு ஜூன் 3ம் தேதியும், 2020ம் ஆண்டு ஜூன் 1ம் தேதியும், 2019ம் ஆண்டு ஜூன் 8ம் தேதியும், 2018ம் ஆண்டு மே 29ம் தேதியும் தொடங்கியது. இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது சற்று தாமதமாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தொடங்குவது சற்று தாமதமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜூன் 4ம் தேதி பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. பருவமழை தாமதமாக தொடங்குவதால் விவசாயம் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த மழையை பாதிப்பதற்கு வாய்ப்பில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது. கேரளாவில் பருவமழை தொடங்குவதற்கான கணிப்புக்கள் 2015ம் ஆண்டை தவிர 18 ஆண்டுகள் சரியாக இருந்தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post கேரளாவில் ஜூன் 4ல் பருவமழை தொடங்க வாய்ப்பு appeared first on Dinakaran.
