×

ஒன்றிய அமைச்சகங்களில் தனியார் நிபுணர்களுக்கு உயர் பதவி பணி

புதுடெல்லி: ஒன்றிய அரசின் 12 துறைகள் மற்றும் அமைச்சகங்களில் ‘லேட்டரல் என்ட்ரி’ முறையில் தனியார் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் போன்ற உயர் பதவிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. பொதுவாக இப்பதவிகள் அனைத்திந்திய மற்றும் குரூப் ஏ சர்வீசஸ் மற்றும் பிற உயர் அதிகாரிகளைக் கொண்டு நிரப்பப்படும். இதற்கான விரிவான விளம்பரம் 20ம் தேதி யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஜூன் 19 வரை விண்ணப்பிக்கலாம்.

The post ஒன்றிய அமைச்சகங்களில் தனியார் நிபுணர்களுக்கு உயர் பதவி பணி appeared first on Dinakaran.

Tags : Union Ministries ,New Delhi ,Union Government ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை