×

சில்லி பாய்ண்ட்…

* ஆதாரம் கேட்கிறார்கள்
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பிஜேபி எம்பியாக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் பல வாரங்களாக போராடி வருகின்றனர். பாலியல் சீண்டலுக்கு ஆளான வீராங்கனை ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் நேற்று, ‘‘ பிரிஜ் பூஷன் மீதான புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் ஒருவர், ‘பிரிஜ் பூஷன் ஒரு தந்தையை போன்று இருப்பவர்… அவர் மீது புகார் சொல்லலாமா’ என்றார். இன்னொருவர், ‘நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் இருக்கிறதா? ’ என்று கேட்கிறார். பிரிஷ் பூஷன் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருந்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று வருந்தியுள்ளார்.

* சிராஜ் வீட்டில் கோஹ்லி
ஐபிஎல் தொடரின் 65வது லீக் ஆட்டத்தில் நாளை ஐதராபாத்-பெங்களூரு அணிகள் களம் காண உள்ளன. அதற்காக பெங்களூரு அணி இப்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூரு அணி கேப்டன் பாப் டூ பிளெஸ்ஸி, நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி ஆகியோர் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் சக வீரர் முகமது சிராஜின் புது வீட்டுக்கு சென்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

* ஆசிய நாடுகள் ஆதிக்கம்
சீனாவில் நடைபெறும் சுதிர்மன் கோப்பை குழு பேட்மின்டன் போட்டியில் ஆசிய நாடுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து நேற்று நடந்த 3வது நாள் ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள ஆசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து ஆகியவை முறையே ஜெர்மனி, கனடா நாடுகளை வீழ்த்தின. கூடவே ஏ பிரிவில் உள்ள சீனா, டென்மார்க் ஆகிய நாடுகள் முறையே சிங்கப்பூர், எகிப்து நாடுகளை வென்றன. இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத இந்திய அணி இன்று சி பிரிவில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது.

The post சில்லி பாய்ண்ட்… appeared first on Dinakaran.

Tags : Brij Bhushan Charan Singh ,Indian Wrestling Federation ,BJP ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...