×

தமிழ் வளர்ச்சித்துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் தமிழ் நூல்களுக்கான பரிசு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ் பரிசுப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ் பரிசுப்போட்டிக்கு 2022ம் ஆண்டில் (1.1.2022 முதல் 31.12.2022 வரை) தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் 33 வகைப்பாடுகளின் கீழ் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன.
போட்டியில் ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒரு நூல் மட்டுமே தெரிவு செய்யப்பட்டு, நூலாசிரியருக்கு ரூ.30,000 நூலை பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ.10,000/- என பரிசுகள் வழங்கப்படும்.
மரபுக்கவிதை, புதுக்கவிதை, புதினம், சிறுகதை, நாடகம் (உரைநடை,கவிதை), சிறுவர் இலக்கியம், திறனாய்வு, மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம், பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள், நுண் கலைகள்(இசை, ஓவியம், நடனம், சிற்பம்), அகராதி, கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு, நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், தமிழர் வாழ்வியல்.

இதற்காக தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், 600 008. தொலைபேசி எண்கள். 044 – 28190412, 28190413 என்ற முகவரியில் நேரிலோ, அஞ்சல் வாயிலாகவோ அல்லது இத்துறையின் வலைதளத்திலோ (https:tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம். போட்டிக்கான விண்ணப்பத்துடன் 10 நூற்படிகளும் போட்டிக் கட்டணம் ரூ.100. “தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை“ என்ற பெயரில் வங்கிக் கேட்புக் காசோலையாக அளிக்க வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற வருகிற 30ம் தேதி கடைசி நாள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ் வளர்ச்சித்துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் தமிழ் நூல்களுக்கான பரிசு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Development Department ,Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Government ,
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...