×

இத்தாலி ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச்

ரோம்: சர்வதேச இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார். இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்று ஆட்டங்கள் ரோம் நகரில் நடந்தன. அதன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் நெம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான ஜோகோவிச்(35வயது,செர்பியா) களமிறங்கினார். அவரை எதிர்த்து பிரிட்டன் வீரர் கேமரன் நோரி(27வயது, 13வது ரேங்க்) விளையாடினார். தனது அனுபவ ஆட்டத்தை நேர்த்தியாக வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-3, 6-4 என அடுத்தடுத்த செட்களை எளிதில் வசப்படுத்தினார். அதனால் ஒரு மணி 30 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 2-0 என்ற நேர் செட்களில் நோரியை வீழ்த்தி, முதல் வீரராக காலிறுதிக்குள் நுழைந்தார். மழை காரணமாக நேற்று முன்தினம் தள்ளி வைக்கப்பட்ட 3வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ்(22வயது, 19வது ரேங்க்), அமெரிக்க ஒன்றிய வீரர் ஜே.ஜே.உல்ப்(24வயது, 54வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் ஸ்வெரவ் ஒரு மணி 49நிமிடங்கள் விளையாடி 6-4, 7-5 என நேர் செட்களில் வென்றார்.

* காலிறுதியில் யெலனா இணை
மகளிர் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மேக்தா லினெட் (போலாந்து), மார்கெட்டா வொண்டர்சோவா (செக் குடியரசு) இணை. யெலனா ஆஸ்டபெங்கோ (லாத்வியா), லிடிமிலா கிச்னோக் (உக்ரைன்) இணை உடன் மோதியது. அதில் யெலனா இணை ஒரு மணி 2 நிமிடங்களில் 6-3, 6-2 என நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

The post இத்தாலி ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச் appeared first on Dinakaran.

Tags : Italian Open tennis ,Djokovic ,Rome ,Novak Djokovic ,International Italian Open tennis ,Italy Open Tennis… ,Italy Open Tennis ,Dinakaran ,
× RELATED யுஎஸ் ஓபன் டென்னிஸ் பைனல்...