×

ரயில்வே பணி நியமன ஊழல் 9 இடங்களில் சிபிஐ ரெய்டு

புதுடெல்லி: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக குறைந்த விலையில் இடங்களை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக நேற்று 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் எம்எல்ஏ கிரண் தேவி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பிரேம் சந்த் குப்தா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடந்தது.

The post ரயில்வே பணி நியமன ஊழல் 9 இடங்களில் சிபிஐ ரெய்டு appeared first on Dinakaran.

Tags : CPI ,New Delhi ,Bihar ,Chief Minister ,Lalu Prasad ,Dinakaran ,
× RELATED சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை மகரஜோதி தரிசனம்..!